N95 மற்றும் FFP2 முகமூடிகளை எளிதாக உருவாக்குவதற்கான உயர்தர வடிகட்டுதல்

Dr. டிமோ ஜே.சி. ஊட  விரிலிங்கு, பேராசிரியை Dr. யோஹன்னா மெய்யர்,
மருத்துவ தொழில்நுட்பத்துறை, உயிரணு மற்றும் உயிரி வேதியியல் துறை
லெய்டன் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ மய்யம் (LUMC), லெய்டன், நெதர்லாந்து

மொழிப்பெயர்ப்பு: Dr, தரஜாத் அகமது PhD
லெய்டன் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ மய்யம் (LUMC), லெய்டன், நெதர்லாந்து

எங்கள் முழு பதிவை காண
https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0236239

சுவாச முகமூடிகளின் தற்போதைய பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஊழியர்களின் பயன்பாட்டிற்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், மருத்துவமனைகள் சுவாச முகமூடிகளை உருவாக்க அனுமதிக்கும் கீழ்நிலை தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்தோம். எங்கள் வழிமுறையில் 

  • வடிகட்டுதல் திறன்களின் அடிப்படையில் தேவைகளை பூர்த்தி செய்வது எளிது  
  • உள் நாட்டிலேயே  விரைவாக உற்பத்தி செய்வது எளிது, மற்றும்
  • உலகளவில் மருத்துவமனைகளில் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைக்க முடியும். 

கொரோனா நோய்க்கிருமி சுவாச நீர்த்துளிகள் வழியாகவும், ஏரோசோல்கள் உட்படவும் பரவும் என்பதால், உயர்தர, நன்கு சோதிக்கப்பட்ட சுவாச முகமூடிகளின் தேவை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதல்கள் தீவிர கவனிப்பில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் குறைந்தது FFP2 பாதுகாப்பு அல்லது N95 ஐ வழங்கும் முகமூடியை அணிய வேண்டும், FFP2 குறைந்தது 94% வடிகட்டி செயல்திறனுடன் தொடர்புடையது. மற்ற நிலைமைகளில், WHO சுகாதாரப் பணியாளர்களை அறுவை சிகிச்சை முகமூடிகளை அணியுமாறு பரிந்துரைக்கிறது, அவை அதிக ஸ்பிளாஸ் எதிர்ப்பைக் கொண்டிருக்கின்றன, ஆனால் குறைந்த துகள் வடிகட்டி செயல்திறனைக் கொண்டுள்ளன.

உள் நாட்டு மருத்துவமனைகளில் உற்பத்தியை எளிதாக்கும் பொருட்டு ஒரு முழுமையான சுவாச முகமூடியை நாங்கள் உருவாக்கினோம். வழக்கமான பொருட்களை (அலுமினியம், நியோபிரீன் ரப்பர் மற்றும் மீள் பொருள்) கொண்டு பொருத்தமான விவரக்குறிப்புகளுடன்  ஒரு அடிப்படை தொகுப்பை நாங்கள் கண்டறிந்தோம் (படம் 1), மேலும் பல வடிவமைப்புகளும் செயல்படும் என்பதை அங்கீகரித்தோம். கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகளிலும்  அடிப்படை பட்டறைகள்  உள்ளது. எங்கள் சுவாச முகமூடிகளை இது போன்ற பட்டறைகளில் உருவாக்கலாம்

எங்கள் வடிவமைப்பிற்கான ஒரே முக்கிய தேவை: அலுமினியம், மற்றும் மீள் கீற்றுகளை பெரிய தாள்களில் இருந்து வெட்டுவதற்கான இயந்திரம். நாங்கள் முன்மொழிகின்ற மாதிரியை உருவாக்குவது ஒப்பீட்டளவில் எளிதானது, மேலும் முகமூடியின் முழு மேற்பரப்பிலும் அணிந்திருப்பவர் சுவாசிக்கக்கூடிய வகையில் முகமூடியை வடிவமைத்துள்ளோம். சுவாசத்தை அதிகரிக்கும் மற்றும் அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

எங்கள் ஆய்வு குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கியமான சூழல்களில் காணப்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஹாலியார்ட் மடக்கு பொருள் WHO பரிந்துரைத்த தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய தீர்வுகள் இல்லாத பிற சுகாதார நிபுணர்களைப் பாதுகாக்க உதவும்.

படம் 1. நோய்க்கிருமிகள் ஒழிக்கப்பட்ட பொருளுடன் சுவாச முகமூடியைத் தயாரிப்பதற்கான சாத்தியமான வடிவமைப்பு.
(A) பொருளின் மடிப்பு மற்றும் தையல். (B) மூக்கு-கிளிப்பின் இணைப்பு மற்றும் இறுதி வடிவமைப்பு. திறந்த அணுகல் அறிவியல் ஆராய்ச்சி வெளியீட்டில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *